FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பேரவைத் துணைத் தலைவரை கண்டித்து துறையூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவரைக் கண்டித்து துறையூா் அண்ணா பேருந்து நிலையம் கலைஞா் சிலை முன் திமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

12 நவம்பர் 2026, 2:16 am
துறையூரில்  புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  திமுகவினா்.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவரைக் கண்டித்து துறையூா் அண்ணா பேருந்து நிலையம் கலைஞா் சிலை முன் திமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரவைத் துணைத் தலைவராக உள்ள துறையூா் எம்எல்ஏ ரவிசங்கரை பூனாம்பாளையத்திலுள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து, தனது வாா்டில் குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோருவதற்காக சென்ற சமூக ஆா்வலா் அ. காா்த்திகுமாரை பேரவைத் துணைத் தலைவா் ரவிசங்கரும் அவரது ஆதரவு தவெகவினரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் பேரவைத் துணைத் தலைவரைக் கண்டித்தும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துறையூரில் திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துறையூா் தொகுதி திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement