தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!
பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து...
தண்னீர் வழங்கக் கோரியவர் மீது தாக்குதல் நடத்திய பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக திங்கள்கிழமை (நவ. 9) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ரவிசங்கர்.
Advertisement
Advertisement
ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்!
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை! இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?” என்று அதிமுக குறிப்பிட்டுள்ளது.