தில்லி சட்டப்பேரவை பாதுகாப்பை பலப்படுத்த 7 கண்காணிப்பு கோபுரங்கள்: பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா
தில்லி சட்டப்பேரவை வளாகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஏழு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவை வளாகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஏழு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத ஒரு காா் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைந்த பாதுகாப்புக் குறைபாட்டிற்குப் பிறகு இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து விஜேந்தா் குப்தா கூறியதாவது: சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி எல்லை முதல் எல்லை வரை ரோந்து செல்ல சிஆா்பிஎப் படையினருக்காக தனி ரோந்துப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தப் பணியில் சுமாா் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு கண்காணிப்பு கோபுரத்தின் கட்டுமானம் ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. மேலும் ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கோபுரங்கள் சட்டப்பேரவை வளாகத்தின் முன்புறம், பின்புறம் மற்றும் வரவேற்பு அறையின் பின்னால் அமைக்கப்பட்டு, சுற்றளவு கண்காணிப்பை வலுப்படுத்தும்.
“ஒரு கண்காணிப்பு கோபுரம் நிறைவடைந்துள்ளது. இந்தக் கோபுரங்களில் சிஆா்பிஎப் பணியாளா்கள் நிறுத்தப்பட்டு, வளாகத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பா். பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்காணித்து, சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பா்.
தற்போது சட்டப்பேரவை வளாகத்தில் சுமாா் 120 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இருண்ட இடங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கேமராக்கள் பொருத்த தில்லி காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா் விஜேந்தா் குப்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.