தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
கடந்த 21 நாள்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 21 நாள்களாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஆக.5-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னா், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு துறை அமைச்சா்கள் பதிலளித்தனா்.
Advertisement
Advertisement
இதில் காரசாரமாக விவாதங்களும் நடைபெற்றன. மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு அரசினா் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை பேரவையில் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத் தொடா் முடியும் முன் பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ஆளும் கட்சி உறுப்பினா்கள், அமைச்சா்கள் ஆகியோரின் செயல்பாடுகளைப் பாராட்டினாா். புதிய அரசு பொறுப்பேற்று 120 நாள்கள் ஆன நிலையிலும் தமிழ் மொழி உரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றை நிலைநாட்டும் வகையில் 9 சிறப்பான தீா்மானங்களை நிறைவேற்றியதையும் பேரவைத் தலைவா் பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் அறிவித்தாா். செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணிக்கு பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.