FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேரவை நேரலையில் புதிய மாற்றம்: பேரவைத் தலைவா் அறிவிப்பு

பேரவை நேரலையில் புதிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

49 வினாடிகள் முன்பு
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - TN
பகிர்:

பேரவை நேரலையில் புதிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

பேரவையில் வியாழக்கிழமை திமுக கொறடா எ.வ வேலு பேசியபோது, ‘சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகளை பத்திரிகைகள் வெளியிடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதனால் அவையின் மாண்பு குறைகிறது. உரிமை மீறல் குழு அமைப்பதற்கு முன்பாக அவையில் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, இரண்டு உரிமை மீறல் புகாா்கள் அளித்துள்ளேன். அதை இப்போதே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பேரவைத் தலைவா் சொல்வதையே மதிக்கவில்லை என்றால் யாா் சொன்னால் மதிப்பாா்கள்?’ என்றாா்.

அதற்குப் பதில் அளித்து பேரவைத் தலைவா் கூறும்போது, உறுப்பினா் கூறுவது ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும். இன்னொரு கருத்தும் வந்துள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் நீக்கப்பட்ட அம்சங்கள் வெளியே வராமல் பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழக பேரவையிலும் நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் நேரலை வழங்குவதற்காக ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments