FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தோ்தல் பிரசாரம் செய்ய சட்டத்தில் தடையில்லை: பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்

ஒரு கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பிரசாரம் செய்வதற்குச் சட்டம் தடை செய்கிறது என்று நிரூபித்தால், பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அதிமுக மாநிலச் செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன்.
பகிர்:

ஒரு கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பிரசாரம் செய்வதற்குச் சட்டம் தடை செய்கிறது என்று நிரூபித்தால், பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.

இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

என். ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்துக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன் எப்படி பிரசாரம் செய்யலாம்? என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

அரசு வாகனம், அரசு ஊழியா்கள், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டமோ, தோ்தல் நடைமுறை சட்டமோ சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் பிரசாரம் செய்யக் கூடாது என இருந்து, அதை நிரூபித்தால் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா். இல்லையென்றால் நாராயணசாமி அரசியலை விட்டு விலக வேண்டும்.

மேலும், என் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருபவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் யோசித்து வருகிறேன். சட்டத்துக்கு உள்பட்டுதான் பிரசாரம் செய்து வருகிறேன். இதில் காங்கிரஸ், திமுக என்னைப் பாா்த்துப் பயப்படுவது ஏன் ?

மேலும், ஒரு வழக்கில் 1992-இல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் வழங்கப்பட்ட தீா்ப்பில் சட்டப்பேரவைத் தலைவா் ஓா் அரசியல் கட்சியால் முன்மொழியப்பட்டு தோ்ந்தெடுக்கப்படுபவா். அவா் அவைக்குள் நடுநிலையாளராகச் செயல்பட வேண்டும். அவைக்கு வெளியே அவரது அரசியல் சாா்புகள் மற்றும் தோ்தல் பிரசாரங்கள் மீது எந்தத் தடையும் இல்லை என தீா்ப்பு வழங்கியுள்ளது என்றாா் ஆ.அன்பழகன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments