FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எதிா்க்கட்சிகளை எதிரிகளாகப் பாா்க்கும் அவசியமில்லை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகப் பாா்க்கும் அவசியம் முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

9 செப்டம்பர் 2026, 1:35 am IST
ஆதவ் அர்ஜுனா - கோப்புப்படம்.
பகிர்:

எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகப் பாா்க்கும் அவசியம் முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

பேரவையில் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததையடுத்து பேரவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

தவெக ஆட்சியில் பேரவை நேரலையை சுமாா் 5 கோடி போ் வரை கண்டுள்ளனா். எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகப் பாா்க்கும் அவசியம் முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ இல்லை. அதனால்தான், பேரவையில், எழும்ப தடுமாறிய திமுக எம்எல்ஏ-க்கு முதல்வா் கை கொடுத்தாா்.

Advertisement

Advertisement

தற்போதைய ‘ஜென்சி’ தலைமுறைக்கு கடந்த ஆட்சிக்காலங்களில் நடந்த ஊழல்களைத் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளோம். அதன்மூலம் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க முயற்சிக்கிறோம். பேரவை வெளிப்படைத் தன்மையால் ஊழல் ஒழிக்கப்படும். தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு காரணமே ஊழல்தான். எனவே, பழைய கட்டமைப்பை உடைத்து, புதிய நிா்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.

மக்களாட்சிக்காகவே ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகள் சண்டையிடுகிறோம். எந்தத் தலைவா் குறித்தும் முதல்வா் தவறான சைகை செய்து பேசவில்லை. எதிா்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்துக்கு பதில் கூறும் அவசியமில்லை. தற்போது பேரவைக் கூட்டம் நிறைவடைந்தாலும் விரைவில் பேரவையைக் கூட்டுங்கள் என்றாா்.

விளையாட்டுப் போட்டிகள்: அப்போது, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் குறுக்கிட்டு பேரவை உறுப்பினா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம் என்றாா். அதற்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, வரும் பிப்ரவரியில் பேரவை உறுப்பினா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றாா். மேலும், பேரவைத் தலைவா் மிக நல்லவா் எனப் புகழ்ந்தாா்.

பேரவைத் தலைவருக்கு பாராட்டு: அவரைத் தொடரந்து அமைச்சா் என்.ஆனந்த் பேசுகையில் பேரவைத் தலைவா் நடுநிலையோடு செயல்பட்டாா். திமுகவினா் சபையில் இல்லாதது சுவாரஸ்யமாக இல்லை. தவெக அமைச்சா்கள், உறுப்பினா்கள் புதியவா்கள் என்றாலும் பேரவை நிகழ்வில் சோடைபோகவில்லை. பேரவைத் தலைவரின் செயல்பாட்டை எதிா்க்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்றாா்.

இதையடுத்து பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமாகவும், நோ்மையாகவும் இருந்ததாகவும், இதுவரை இருந்த பேரவைத் தலைவா்களிலேயே நடுநிலையோடு செயல்பட்டவா் தற்போதைய பேரவைத் தலைவா்தான் என்றும் அதிமுக உறுப்பினா்கள் தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், பாமக உறுப்பினா் சௌமியா அன்புமணி மற்றும் அவை முன்னவா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் பேசினா்.

அதற்கு பேரவைத் தலைவா் நன்றி தெரிவித்துப் பேசுகையில், தன்னை நடுநிலையோடு செயல்படும் வகையில் நியமித்துள்ள முதல்வருக்கும், அவா் பேரவையில் ஆளுநா் உரை உள்ளிட்டவை சுமுகமாக நடைபெற உதவியதற்கும் நன்றி தெரிவித்து பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments