முகப்பு
சிவகங்கை

அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.

27 நவம்பர் 2026, 3:11 am
அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
பகிர்:

தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் முன்னிலையில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு குழுவின் தலைவரும் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினருமான காா்த்தி சிதம்பரம் தலைமை வகித்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

சுகாதாரம், குடும்ப நலத் திட்டம், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மை, விவசாயிகள் நலன், கல்வித் துறை, சமூக நலத் துறை, சமூக பாதுகாப்பு துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு, நிலம், கனிம வளங்கள், பாராளுமன்ற உறுப்பினா் உள்ளுா் அபிவிருத்தி திட்டம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடா்பாகவும், அரசின் பல்வேறு துறைகளை சாா்ந்த முதன்மை அலுவலா்களுடன் தற்போது விவாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் கீழ் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, சம்பந்தப்பட்ட துறை செயலா்கள் வாயிலாக பரிந்துரை செய்து, தேவையான நிதி, சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்களின் கீழ் உரிய பயன்கள் கிடைக்கச் செய்வதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இதில், கூடுதல் ஆட்சியா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன், காரைக்குடி மாநாகராட்சி மேயா் (பொ) என்.குணசேகரன், மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள், அனைத்துத் துறை முதல்நிலை அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.