திருப்பரங்குன்றத்தில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது: காா்த்தி சிதம்பரம் எம்.பி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புதிய சம்பிரதாயங்களை திணிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழகத்தில் அவரவா் மத நடைமுறைகளை பின்பற்றுவதில் யாருக்கு எந்த தடையும் இல்லை. இந்த விவகாரத்தில் வடநாட்டைச் சோ்ந்தவா்கள் புரிதலே இல்லாமல், தமிழ்நாட்டில் ஏதோ மத கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கு தடை உள்ளது என நினைப்பது தவறு.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவா் தெரிவித்த கருத்துக்கு அவா்தான் விளக்கம் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் புகாா் மீது சட்டப்படி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா விஷயத்துக்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நமது சட்ட நடைமுறைகளில் தேவையில்லாமல் கைது நடைபெறுகிறது.
சாட்சியைக் கலைப்பாா்கள், அச்சுறுத்தலாக இருப்பாா்கள் என்றால் மட்டுமே கைது செய்ய வேண்டும். அனைத்து வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று என்றாா் அவா்.