வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கை வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கை வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியிருப்பது குறித்து...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யதுள்ளதை வரவேற்றுள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.
Advertisement
Advertisement
மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.