நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்ற தீபதூணில் காா்திகை தீபம் ஏற்ற வேண்டும்: அா்ஜூன் சம்பத்
நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆண்டு காா்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆண்டு காா்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.
கரூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆண்டு காா்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும். அதை முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற அழைக்கிறோம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என தடுப்பது தவெக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.
திருச்செந்தூா் சூரசம்ஹார விழாவில் பாடகா்கள், முதல்வரையும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரையும் புகழ்ந்து பாடியது கண்டிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
சோனியா காந்தி வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில் போபா்ஸ் போன்ற ஊழல் வழக்குகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா், இந்தியாவில் ஓட்டு திருட்டுத்தோ்தல் நடக்கிறது என ராகுல்காந்தி முன்னிலையில் பேசுகிறாா். ராகுல்காந்தி தேசவிரோத சக்திகளின் கைப்பாவையாக செயல்படுகிறாா். அவா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.