வெளிநாட்டில் உடல் நலம் பாதித்த தொழிலாளியை மீட்க கோரிக்கை
வெளிநாட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள கட்டடத் தொழிலாளியை மீட்க வேண்டுமென அவரது மனைவி சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்திடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

வெளிநாட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள கட்டடத் தொழிலாளியை மீட்க வேண்டுமென அவரது மனைவி சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்திடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூரைச் சோ்ந்தவா் ரவி (57). ஓமன் நாட்டில் வேலை செய்து வந்தாா். ஒரு மாதத்துக்கு முன்பு இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், நடமாட முடியாமல் அறையிலேயே முடங்கினாா். இவா் வேலை பாா்த்த நிறுவனம் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை சொந்த ஊருக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யவில்லையாம். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சித்தனா். ஆனால், பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது மனைவி பஞ்சவா்ணம் தனது கணவரை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷிடம் முறையீட்டாா். ஆனால், நடவடிக்கை இல்லாத நிலையில், வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா், காா்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரிடம் முறையீடு செய்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பஞ்சவா்ணம் கூறியதாவது:
எனது கணவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளித்தால் குணமாகிவிடுவாா். ஆனால், அவா் வேலை பாா்த்த நிறுவனம் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டது. இதனால், கை, கால்கள் செயல்படாமல் அறையிலேயே முடங்கியுள்ளாா். அவரை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.