வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது
நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவையைச் சோ்ந்தவரை, பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவையைச் சோ்ந்தவரை, பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள முருக்கன்குடி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (42) என்பவரை, அடையாளம் தெரியாத ஒருவா் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடா்புகொண்டு, நியூசிலாந்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதற்காக விசா, பணி நியமன ஆணை மற்றும் விமானப் பயணச் சீட்டு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்காக ரூ. 69,080 பெற்றாா். ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றினாா்.
இதனால் பாதிக்கப்பட்ட செல்வம் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மோசடி செய்தது கோவை குளத்துப்பாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் அருண்குமாா் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சாா்பு ஆய்வாளா் மனோஜ் தலைமையிலான தனிப்படையினா் குளத்துப்பாளையத்துக்குச் சென்று அருண்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து கைப்பேசி, வங்கி கணக்குப் புத்தகம், ஏடிஎம் காா்டு மற்றும் ரூ. 13,433 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அருண்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement