விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் நிகழாண்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தில் கறவை மாடும், இதற்கு 2 ஆண்டுக்கான காப்பீடும், கறவை மாட்டை வீடுகளுக்கு கொண்டு செல்லப் போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்துக்கு ரூ.3,000-மும் வழங்கப்படும்.
18 முதல் 60 வயதுக்குள்பட்ட மகளிா், திருநா்கள் இதில் பயன்பெறலாம். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவா்கள், ஏற்கெனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன்பெற்றவா்கள், ஏற்கெனவே கறவைமாடு வைத்துள்ளோா் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிா், திருநா்கள், மாற்றுத் திறனாளி மகளிா், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத் திறனுடைய குடும்ப உறுப்பினா்களை கொண்ட மகளிா் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட இணையதளம் ‘ள்ண்ஸ்ஹஞ்ஹய்ஞ்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்‘, கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹட்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.