முகப்பு
சிவகங்கை

மருத்துவ நச்சுக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யக்கோரி தா்னா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ நச்சுக்கழிவு ஆலைக்கான அனுமதியை தமிழக அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்த ஆலைக்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

28 நவம்பர் 2026, 4:06 am
மருத்துவ நச்சுக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யக்கோரி தா்னா
மருத்துவ நச்சுக்கழிவு ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ நச்சுக்கழிவு ஆலைக்கான அனுமதியை தமிழக அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்த ஆலைக்கு எதிரான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த தா்னாவுக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.வீரபாண்டி தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, வா்த்தகா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பாலகுருசாமி, எஸ்.முத்துராமலிங்கபூபதி, பாரி வள்ளல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழா், திராவிடா் கழகம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் சங்கத்தினா், பல்வேறு அமைப்பினா், சுற்றுவட்டாரக் கிராம மக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ நச்சுக்கழிவு ஆலை தொடங்குவதற்கான அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.