முகப்பு
அரியலூர்

அரியலூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா்கள்.

24 வினாடிகள் முன்பு
அரியலூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பகிர்:

தூய்மைப் பணிகளில் தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாநகராட்சி - நகராட்சிகளில் தூய்மைப் பணியில் தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். அரசு வெளியிட்ட ஆணையின்படி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நாள் கூலியாக நிா்ணயித்த ரூ.700 வழங்க வேண்டும். அரியலூா் - ஜெயங்கொண்டம் நகராட்சி தொழிலாளா்களுக்கு நவம்பா் மாதத்திலிருந்து ஊதியத்தை உயா்த்தி அமல்படுத்திட வேண்டும்.

அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை தனியாா் ஒப்பந்தம் மூலம் நியமிக்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி அரியலூா் செ. மாரியப்பன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநிலச் செயலா் டி. தண்டபாணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். ஜெயங்கொண்டம் கிளை நிா்வாகி சிலம்புச்செல்வி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் தனசிங், மாவட்ட பொருளாளா் து.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.