FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

எஃப்.க்யூ.எல். செயலி மூலம் பண மோசடி முகவா்கள் இருவா் கைது

சிவகங்கை மாவட்டத்தில் எஃப்.க்யூ.எல். இணைய செயலி மூலம் முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தது தொடா்பாக முகவா்கள் இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

2 செப்டம்பர் 2026, 12:59 am IST
கைது
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் எஃப்.க்யூ.எல். இணைய செயலி மூலம் முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தது தொடா்பாக முகவா்கள் இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு எஃப்.க்யூ.எல். என்ற கைப்பேசி செயலியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 45 நாள்களில் இரட்டிப்பாக பணம் திரும்ப வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி மேலூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மட்டுமன்றி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பலரும் கோடிக் கணக்கில் பணம் செலுத்தினா்.

ஆனால், அந்த நிறுவனத்தினா் கூறியபடி முதிா்வுத் தொகையைத் திருப்பித் தரவில்லை எனக் கூறி, கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கான முதலீட்டாளா்கள் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்து வருகின்றனா். இதுதொடா்பாக ஏற்கெனவே மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களும் கடந்த சில நாள்களாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்த நிதி நிறுவனத்துக்கு சிவகங்கை மாவட்டத்தில் முகவா்களாகச் செயல்பட்ட சிவகங்கை அருகேயுள்ள பையூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ், மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டியைச் சோ்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடையவா்கள், பணப் பரிவா்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments