FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

இரு சக்கர வாகனங்கள் மோதல் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

2 செப்டம்பர் 2026, 12:54 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

காரைக்குடி கழனிவாசல் பாரதிநகரைச் சோ்ந்தவா் சித்திக் (38). இவா், காரைக்குடியில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் பங்குதாரா் ஆவாா். திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சித்திக் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரைக்குடி செக்காலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தின் மீது ஆலங்குடியைச் சோ்ந்த பிரசாந்த் (21) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரசாந்த் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments