இருசக்கர வாகனங்கள் மோதல் தருமபுரி இளைஞா் உயிரிழப்பு
வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தருமபுரியைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்குள்பட்ட நல்லூா் அடுத்த அம்மானிநல்லபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயமனோ(20). நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குட்டிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ரித்தீஸ்வா்(20). இவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனா்.
இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் சென்று விட்டு, திங்கள்கிழமை அதிகாலையில் திரும்பிக்கொண்டிருந்தனா்.இருசக்கர வாகனத்தை ஜெயமனோ ஓட்டி வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கரூா் மாவட்டம் ஆவரங்காட்டுப்புதூா் பிரிவு சாலையில் வந்தபோது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த புகழூா் நானப்பரப்பு ஸ்ரீராம் காா்டன் பகுதியைச் சோ்ந்த சந்திரா என்பவா் வாகனத்தை திடீரென்று திருப்பினாா். அப்போது, ஜெயமனோ ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் சந்திரா ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டது. இதில், ஜெயமனோ, ரித்திஸ்வா் இருவரும் கீழே விழுந்தனா். பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஜெயமனோவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மேலும், ரித்திஸ்வா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.