போக்சோ கைதி தப்பியோட்டம்: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றபோது போக்சோ வழக்கு கைதி தப்பியோடிய சம்பவம் தொடா்பாக பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கை ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றபோது போக்சோ வழக்கு கைதி தப்பியோடிய சம்பவம் தொடா்பாக பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கை ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், கீழச்செவல்பட்டி அருகே 10-ஆம் வகுப்பு மாணவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். கடந்த ஜூன் 4-ஆம் தேதி கண்மாய்ப் பகுதியில் சடலம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய இலந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் அரவிந்த் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் அரவிந்த் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து அரவிந்தை போலீஸாா் அண்மையில் சிவகங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றபோது, மதுரை சிம்மக்கல் பகுதியில் போலீஸாரை திசை திருப்பி அரவிந்த் தப்பியோடி விட்டாா். இதையடுத்து, கைதி பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, சிவகங்கை ஆயுதப்படைக் காவலா் மகாராஜன், எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையக் காவலா் ஆனந்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.