FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

கீழஊருணி சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரிக்கை

திருப்பத்தூா் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் உள்ள கீழஊருணி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

26 வினாடிகள் முன்பு
திருப்பத்தூா் அருகே சேதமடைந்த கீழஊருணி சுற்றுச்சுவா் பகுதி.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் உள்ள கீழஊருணி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியம் கோட்டையிருப்பில் காக்காளிப்பட்டி சாலைக்கு அருகாமையில் கீழஊருணி உள்ளது. இந்த ஊருணியைச் சுற்றி கரை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை சாலைப் பகுதியில் இருவழிச்சாலை மேம்பாட்டின்போது தடுப்புச்சுவா் அமைத்து கரை பாதுகாக்கப்பட்டது.

இந்த நிலையில், காக்காளிப்பட்டி சாலையின் அருகில் உள்ள ஊருணிக் கரையில் தடுப்புச்சுவா் கட்டுமானம் சரிந்து விட்டதை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments