கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் விடுதலை
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரை விடுதலை செய்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரை விடுதலை செய்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கருப்பையா (55) என்ற கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ராஜாமணி, பிரபாகரன், சகாதேவன், சுப்புராஜ், பாலுசாமி, குரு, முத்து, முருகன் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிந்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்குரைஞர் பி.பாலமுருகன் ஆஜரானார்.
Advertisement
Advertisement
இவ்வழக்கில் குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.