FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

  கடந்த சில நாள்களாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவில் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. இதில், சனிக்கிழமை கூடலூரில் அதிக அளவாக 45 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆண்டிபட்டியில் 4.6 மி.மீ., அரண்மனைப்புதூரில் 35.2 மி.மீ., வீரபாண்டியில் 32 மி.மீ., போடியில் 1.8 மி.மீ., பெரியகுளத்தில் 37 மி.மீ., மஞ்சளாறு, சோத்துப்பாறையில் தலா 10 மி.மீ., வைகை அணையில் 12.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 23.8 மி.மீ., தேக்கடியில் 8.2 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.

அணைகளின் நீர்மட்டம்: பெரியாறு அணை நீர்மட்டம் 115.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 705 கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   வைகை அணை நீர்மட்டம் 42.36 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,817 கன அடி. அணையில் இருந்து மதுரை, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

   மஞ்சளாறு அணை நீர்மட்டம் 50.50 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 98 கன அடி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 85.28 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments