தேவாரத்தில் பெண் கொலை: ஜீப் ஓட்டுநர் கைது
தேவாரத்தில் பெண்ணைக் கொலை செய்ததாக ஜீப் ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவாரத்தில் பெண்ணைக் கொலை செய்ததாக ஜீப் ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போடியை அடுத்த தேவாரம் அமராவதி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சரணமணி (40). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்ததால் சரணமணி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கேரளத்தில் உள்ள ஏலத் தோட்ட வேலைகளுக்கு தினமும் ஜீப் மூலம் சென்று வந்தார். இந்நிலையில் சில தினங்களாக அவரைக் காணவில்லை. அவரது வீடு பூட்டியிருந்த நிலையில் அவரது தங்கை கார்த்திகா செல்வி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், சரணமணி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது பூட்டிய வீட்டிற்குள் சரணமணி வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவாரம் போலீஸார் விசாரணை செய்ததில், ஜீப் ஓட்டுநரான தேவாரம் திடீர்புரத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (35) என்பவருக்கும் சரணமணிக்கும் ஜீப்பில் வேலைக்கு சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டதும், அடிக்கடி சரணமணி வீட்டுக்கு ஆண்டிச்சாமி வந்து சென்றதும் தெரியவந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில், சரணமணியை ஆண்டிச்சாமி கொலை செய்திருக்கலாம் எனக் கருதிய போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.