தேனியில் தொழிற்பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை: ஆக.20-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் ஆக.20-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஆக.20-ஆம் தேதி 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தொழிற் பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரத்தை, தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ, அலுவலக தொலைபேசி எண்: 04546-252240, 260364 ஆகியவற்றிலோ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.