FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேனியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் சம்பள உயர்வு கோரி புதன்கிழமை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

தேனியில் சம்பள உயர்வு கோரி புதன்கிழமை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி, பாரத ஸ்டேட் வங்கித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலர் ஆர்.வீரராகவன் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க தேனி கிளைச் செயலர்கள் ரமேஷ்சிவக்குமார், முரளிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2017, நவம்பர் மாதம் முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். வாராக் கடன் வசூலில் ஈடுபட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments