போடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
போடி அருகே, புதன்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே, புதன்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போடி ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (24). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நாகராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் போடி அருகே சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (32). கூலித் தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமலும், செலவுக்கு பணம் தராமலும் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த பாண்டியன் விஷம் குடித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.