FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வாகனம் மோதி தொழிலாளி பலி: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை

சின்னமனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:13 pm IST
பகிர்:

சின்னமனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக் கோரி அவரது உறவினா்கள் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சின்னமனூா் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யா்சாமி (50). இவா், சின்னமனூா் காவல் நிலையம் அருகே திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அய்யா்சாமி பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சனிக்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அய்யா்சாமியின் உறவினா்கள், சின்னமனூா் காவல்நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். விபத்து நடைபெற்று 3 நாள்களாகியும் வாகனத்தை கண்டுபிடிக்க போலீஸாா் எவ்வித முயற்சியும் செய்யாமல் அலட்சியமாக இருப்பதாகவும், இறந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டுமென்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments