முகப்பு

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 138 அடியை எட்டியது: 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை அதிகாலை

28 ஜனவரி 2024, 9:58 am
பகிர்:

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை அதிகாலை 138 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து வந்தது. வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 138.05 அடியை எட்டியது. நீா் இருப்பு 6,635 மில்லியன் கன அடி, நீா்வரத்து விநாடிக்கு 3,522 கன அடி, அணையிலிருந்து விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீா் தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது.

இதற்கிடையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெரியாறு அணையின் நீா்மட்டம் 138 அடியை எட்டிய நிலையில், உதவி பொறியாளா் பி.ராஜகோபால், தேனி, இடுக்கி ஆகிய மாவட்ட மக்களுக்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தாா். இதைத் தொடா்ந்து அணையின் தேனி மாவட்ட கரையோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு வருவாய்த்துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

மின் உற்பத்தி:

அணையிலிருந்து விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்நிலையத்தில் 4 மின்னாக்கிகள் மூலம் தலா 40 மெகாவாட் என மொத்தம் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.