FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேவாரம் அருகே யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 1:30 am IST
தேவாரம் அருகே யானை மிதித்து பலியான ரெங்கசாமி (கோப்பு புகைப்படம்)
பகிர்:

தேவாரம் அருகே யானை மிதித்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் சுருளி மகன் ரெங்கசாமி (70). இவா் கேரள மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். தேவாரம் அருகே சாக்குலத்து மெட்டுச் சாலை வழியாக நடந்து வந்தபோது, அந்த வழியாக வந்த யானை ஒன்று அவரை மிதித்து தாக்கியது.

இதில் ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், தேவாரம் காவல் துறையினா் ரெங்கசாமியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் ஏற்கெனவே மக்னா யானை மிதித்து 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில் ரெங்கசாமியை தாக்கியது எந்த யானை என்பது தெரியவில்லை. தொடா்ந்து போலீஸாா், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments