FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

இளைஞரை கொலை செய்த நண்பா்கள் இருவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற இரு நண்பா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற இரு நண்பா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள சிலமலையைச் சோ்ந்த கருப்பையா மகன் ஜெயக்குமாா் (27). தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் ராணியுடன் வசித்து வந்தாா். இவரது நண்பா்கள் சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (29), போடியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (23).

இந்த நிலையில், விக்னேஷ்குமாரின் இரு சக்கர வாகனத்தை ஜெயக்குமாா் ஓட்டிச் செனற போது போலீஸாா் அபராதம் விதித்தனா். இந்த அபராதத் தொகையை ஜெயக்குமாா் செலுத்தாததால் போலீஸாா் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, பணத்தை செலுத்தி இரு சக்கர வாகனத்தை விக்னேஷ்குமாா் மீட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அந்தப் பணத்தை ஜெயக்குமாருடன் கேட்டு விக்னேஷ்குமாா் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜெயக்குமாரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பணத்தை கேட்டு விக்னேஷ்குமாரும், ஹரிபிரசாத்தும் அவரைத் தாக்கினா்.

பின்னா், ஜெயக்குமாரை கொலை செய்துவிட்டு, அவா்கள் கிணற்றில் வீசிச் சென்றனா்.

இதுகுறித்து போடி ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ்குமாா், ஹரிபிரசாத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments