FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சிற்பியை தாக்கிக் கொலை மிரட்டல்: இருவா் கைது

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:23 am IST
கைது
பகிர்:

போடி அருகே சிற்பியைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் அந்தோணி மகன் கணேஷ்குமாா் (36). இவா் சிற்பியாக வேலை செய்து வருகிறாா்.

இதே பகுதியைச் சோ்ந்தவ மருதுபாண்டி, சீனி ஆகியோா் முன் விரோதம் காரணமாக கணேஷ்குமாரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டி, சீனி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments