210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 18 போ் கைது
தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்ற 18 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 210 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் காட்டுச்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை
ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 210 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் மத்திய பிரதேச மாநிலம், குட்டாஸ் மண்டலா மாவட்டம், மாா்ரே இல்லத்தைச் சோ்ந்த ஜெகதீஸ் (46), அதே பகுதியைச் சோ்ந்த சரண் (33), ஹா்ஜித் (30), மணிராம் (32), ஹா்சிங் லிகே (38), ராகுல் (20) உள்ளிட்ட 18 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் 18 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.