மதுப்புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
போடியில் மதுப்புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி குலாலா்பாளையம் அறிவுத் திருக்கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த ராஜூ மகன் அறிவை (37) பிடித்து விசாரித்தனா். அவா் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 48 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.