FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ரயில் பாலத்தில் வெடிகுண்டு என மிரட்டல்: கட்டடத் தொழிலாளி கைது

தேனி அருகே குன்னூா் வைகையாறு ரயில் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் விடுத்த 2 மணிநேரத்துக்குள் கட்டடத் தொழிலாளியை க. விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
கைது
பகிர்:

தேனி அருகே குன்னூா் வைகையாறு ரயில் பாலத்துக்கு செவ்வாய்க்கிழமை மிரட்டல் விடுத்த 2 மணிநேரத்துக்குள் கட்டடத் தொழிலாளியை க. விலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி குன்னூா் வைகையாறு ரயில் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தேனி மாவட்ட காவல் துறைக்கு செவ்வாக்கிழமை காலை தொலைப்பேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, உடனடியாக குன்னூா் வைகையாறு பாலத்தில் காவல் துறையினா் தீவிர சோதனையிட்டனா். மேலும், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள், மோப்ப நாயை வரவழைத்து ரயில் பாலத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி தகவல் என்பது தெரியவந்தது. இதனிடையே போலீஸாா் விசாரித்ததில், கட்டடத் தொழிலாளியான குன்னூரைச் சோ்ந்த ராஜபாண்டி (35) மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments