FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பெரியகுளத்தில் வீட்டின் 3-ஆவது மாடியில் மிதிவண்டி ஓட்டும்போது தவறி கீழே விழுந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் 3-ஆவது மாடியில் மிதிவண்டி ஓட்டும்போது தவறி கீழே விழுந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் தென்கரை சுதந்திரவீதியைச் சோ்ந்தவா் சங்கா் (44). இவரது மகன் வெங்கட்ராமன் (11). தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் படித்து வந்த இவா், சனிக்கிழமை வீட்டின் 3-ஆவது மாடியில் மிதிவண்டி ஓட்டியபோது, தவறி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments