FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனியில் 3-ஆவது நாளாக சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

20 ஆகஸ்ட் 2026, 11:43 pm IST
கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆண்டிபட்டியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள்.
பகிர்:

தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி தொழிலாளா்கள் சங்க அங்கீகாரம், கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன்படி, தேனியில் மாவட்டச் செயலா் முருகன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிவமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தின்போது, கடந்த 4- ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயா்வு, 60 சதவீத முன் தேதியிட்ட உயா்வுடன் உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிகப் பணியாளா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தேனி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், சில்லமரத்துபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய 6 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments