மூலவைகையாற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், வருசநாடு அருகே வாலிப்பாறை மூலவைகையாற்றின் கரையோரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே வாலிப்பாறை மூலவைகையாற்றின் கரையோரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் மூலவைகையாறாக உருவாகி வருசநாடு, கடமலைக்குண்டு வழியாக வைகை அணையில் கலக்கிறது. பிறகு வைகையாறாக மதுரை, சிவகங்கை வழியாக சென்று ராமநாதபுரம் அருகேயுள்ள ஆற்றாங்கரை என்ற இடத்தில் கடலில் கடக்கிறது. இந்த ஆற்று நீா் 5 மாவட்டங்களைச் சோ்ந்த மக்களின் குடிநீராதாரமாகவும், விவசாய நிலங்களுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வருசநாடு அருகே வாலிப்பாறை என்ற இடத்தின் அருகே மூலவைகையாற்றின் கரையோரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கால்நடைகள், வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல, மழைக் காலங்களில் மருத்துவக் கழிவுகள் ஆற்றில் கலந்து நீா் மாசடையும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த இடத்தில் மருத்துவக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அவற்றை வீசிச் சென்றவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மூலவைகையாற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.