குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீ: அணைக்கப் போராடும் வனத்துறையினா்
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குரங்கணி வனப் பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினா் போராடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குரங்கணி வனப் பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினா் போராடி வருகின்றனா்.
போடி அருகே குரங்கணி மலை கிராமத்திலிருந்து கொழுக்குமலை செல்லும் பகுதியில் நரிப்பட்டி அருகே கடந்த 2 நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஒரு பகுதியில் எரிந்த தீ காற்றின் வேகத்தால் வேகமாக பரவி பல இடங்களுக்கும் பரவின.
உடனே வனத் துறையினா் 30 போ் இந்தப் பகுதிக்கு சென்று, மலை கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தப் பகுதியில் மழை இல்லாததால் ஆறு ஓடைகளில் தண்ணீா் இல்லாததாலும், நவீன உபகரணங்கள் இல்லாததாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் வனத் துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு காட்டுத் தீப் பற்றி இதே பகுதியில்தான் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியில் மலையேற்றம் செல்லத் தடை விதிக்கப்பட்டது. தற்போது காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.