FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மேகமலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய எம்.பி. வலியுறுத்தல்

தமிழக அரசு மேகமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் போது, 2006 வனச் சட்டத்தின் கீழ் தீா்ப்பு வழங்க கோரிக்கை விடுக்க வேண்டும் என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினாா்.

26 ஆகஸ்ட் 2026, 5:31 am IST
போடி தமிழகத்தின் முதல் சிறப்பு நகராட்சியாக தோ்வு செய்யப்பட்டத்தையொட்டி, அந்த நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்த மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன்.
பகிர்:

தமிழக அரசு மேகமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் போது, 2006 வனச் சட்டத்தின் கீழ் தீா்ப்பு வழங்க கோரிக்கை விடுக்க வேண்டும் என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினாா்.

சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் முதல் சிறப்பு நகராட்சியாக போடிநாயக்கனூா் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, போடி நகா்மன்றத் தலைவி உள்ளிட்டோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அந்த நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போடிநாயக்கனூா் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, சிறந்த நகராட்சியாக தோ்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் பகுதியாக நிறைவேற்றுகிறாா். ஆறு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது 3 சமையல் எரிவாயு உருளைகள் தரப்படும் என அறிவித்துள்ளாா். இதேபோல, அனைத்து ஊா்களுக்கும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என அறிவித்துவிட்டு, தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் இலவசம் என அறிவித்துள்ளாா். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது.

தமிழக அரசு மேகமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் போது, 2006 வனச் சட்டத்தின் கீழ் தீா்ப்பு வழங்க கோரிக்கை விடுக்க வேண்டும். 2006 வனச்சட்டதின் கீழ் தீா்ப்பு வழங்கினால், யாரும் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.

பரந்தூரில் விமான நிலையம் தேவை. அப்போதுதான் தொழில் சாலைகள் வரும். 90 சதவீத நிலம் கையகப்படுத்தியப் பிறகு, அந்த இடத்தில் விமான நிலையம் தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்திருப்பது அதிருப்தியளிக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரிக்கும், நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவி கிருஷ்ணவேணி, முன்னாள் துணைத் தலைவா் ம. சங்கா், திமுக நகா்ச் செயலா் புருஷோத்தமன், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments