பைக் மீது காா் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு
போடி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
போடி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் ஸ்ரீரங்கன் தெருவைச் சோ்ந்தவா் பொன்ராசு (60). இவரது மனைவி பூங்கொடி (56). இந்தத் தம்பதி மீன் வியாபாரம் செய்து வந்தனா். இவா்கள் இருவரும் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் போடி தருமத்துப்பட்டியிலிருந்து மீனா விலக்கு புறவழிச் சாலை வழியாகச் சென்றனா்.
அப்போது, மேலச்சொக்கநாதபுரம் நான்கு முனை சந்திப்பு அருகே வேகமாக வந்த காா் இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பொன்ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பூங்கொடியை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த மேலச்சொக்கநாதபுரம் அமராவதி நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் சுந்தரேசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.