FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையத்தில் மிலாது நபியை முன்னிட்டு, மதுக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காா்க்கில் சிக்கையன்பட்டியில் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, முத்தையா மனைவி காஞ்சனாவை (52) கைது செய்தனா்.

இதேபோல, உத்தமபாளைம்-கோம்பை சாலையில் சிக்கையம்மன் கோயில் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 26 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அந்தோணி மகன் முன்னோடி ஆரோக்கியராஜை (32) கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments