FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது

போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 10:56 pm IST
கைது
பகிர்:

போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீசுவரி கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (40) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயகுமாரைக் கைது செய்தனா்.

இதேபோல, போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் முத்தையன்செட்டிபட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த பவுன்ராஜ் மனைவி விஜயா (65) மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விஜயாவைக் கைது செய்து, அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments