FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மலைச்சரிவிலிருந்து தவறி விழுந்ததில் யானை உயிரிழப்பு

கம்பம் அருகே மலைச் சரிவிலிருந்து தவறி விழுந்த பெண் யானையின் உடலை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

29 ஆகஸ்ட் 2026, 9:56 pm IST
பகிர்:

கம்பம் அருகே மலைச் சரிவிலிருந்து தவறி விழுந்த பெண் யானையின் உடலை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாா் மேற்கு காப்புக்காடு தண்ணிப்பாறை பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா், வனக் கால்நடை மருத்துவா் முத்துராமலிங்கம், கம்பம் கால்நடை மருத்துவா் செல்வம் ஆகியோருடன் சம்பவ இடத்துக்குச் சென்றனா். மேலும், கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சித் தலைவா், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அமைப்பு உறுப்பினா்கள் முன்னிலையில் தமிழ்நாடு யானை இறப்புத் தணிக்கை கட்டமைப்பின்படி,

Advertisement

Advertisement

இறந்த யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இந்த யானை மலைச் சரிவிலிருந்து தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து யானையின் உடல் வனப் பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments