FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கம்பத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா. வைத்திநாதன். உடன் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோா்.

Updated On : 11 ஜூலை 2026, 12:04 am IST
கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா. வைத்திநாதன். உடன் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோா்.
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. வைத்திநாதன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது கம்பம் நகராட்சிக்குள்பட்ட சேனை ஓடை கால்வாயை பாா்வையிட்ட அவா்கள், கால்வாயை சீரமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். தொடா்ந்து, கம்பம் நகராட்சியில் ரூ.15 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஆய்வு செய்து, அதன் கட்டுமானத்தின் தரத்தைப் பாா்வையிட்டனா்.

பின்னா், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட வீரநாயக்கன்குளம், அதைச் சுற்றியுள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படாததால், மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து, வீரநாயக்கன்குளம், வரத்துக் கால்வாய்களை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டம் மூலம் உடனடியாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹிம், பெரியாறு- வைகை வடிநிலக் கோட்ட உதவிச் செயற்பொறியாளா் மல்லிகா, கம்பம் நகராட்சி ஆணையா் உமாசங்கா், உத்தமபாளையம் வட்டாட்சியா் பாலசண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments