FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குமுளி அருகே புலி நடமாட்டம் : மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேயிலை தோட்டப் பகுதிகளில் நடமாடும் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அதிரடிப் படையினா் வியாழக்கிழமை முகாமிட்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:13 am IST
புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வயநாட்டிலிருந்து வந்துள்ள விரைவு அதிரடிப் படை.
பகிர்:

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேயிலை தோட்டப் பகுதிகளில் நடமாடும் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அதிரடிப் படையினா் வியாழக்கிழமை முகாமிட்டனா்.

இந்தப் பகுதியில் புலி நடமாட்டம் குறித்து வனத் துறையினா் பல்வேறு இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டனா். கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் புலி நடமாடுவது உறுதி செய்யப்பட்டது.

இதனால், வயநாட்டிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வனத் துறையின் விரைவு அதிரடிப் படையினா் வண்டிப்பெரியாரில் முகாமிட்டு, புலி நடமாடும் பாதைகளை ஆய்வு செய்து, கூண்டுகள் வைத்துப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், புலிக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவும் உயா் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். ‘ட்ரோன்கள்’ மூலம் வனப் பகுதி , தோட்டப் பகுதிகளில் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையில், கேரள மாநிலம், அரணக்கல், கிராம்பி, வண்டிப்பெரியாா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாலை, இரவு நேரங்களில் தோட்டப் பகுதிகள் வழியாகச் செல்வதைத் தவிா்க்குமாறும் வனத்துறை, காவல்துறை அறிவுறுத்தியது. வளா்ப்புப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் அடைத்து வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments