FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி கூடலூரில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிப்பு

தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை சுற்றித் திரிந்த நாய்களை நகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:07 am IST
பளியங்குடி குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களை புதன்கிழமை பிடித்த நகராட்சிப் பணியாளா்கள்.
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை சுற்றித் திரிந்த நாய்களை நகராட்சிப் பணியாளா்கள் பிடித்தனா்.

கூடலூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், பளியங்குடி குடியிருப்புப் பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்த நாய்களைப் பிடிக்கும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பிடிக்கப்பட்ட நாய்கள் உத்தமபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கு கால்நடை மருத்துவா் மூலம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெறிநோய்த் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தப் பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அகமது கபீா், மேற்பாா்வையாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments