FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.94.24 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை காணொலி மூலம் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:43 am IST
பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை காணொலி மூலம் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் திறந்து வைக்க பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளி ஆசிரியா்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.94.24 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை காணொலி மூலம் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தப் பள்ளியில் மாணவா்களுக்கு போதுமான இட வசதியில்லாத நிலையில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, 2024- 2025-ஆம் ஆண்டில் நபாா்டு வங்கி நிதி மூலம் ரூ.94.24 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் , வீரபாண்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், காணொலி மூலம் பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பண்ணைப்புரம் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள், பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments