நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்து வெள்ளிக்கிழமை அதிகரித்தது.
நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்து வெள்ளிக்கிழமை அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் ஜூலை மாதத் தொடக்கம் முதல் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை காரணமாக அணைக்கு வரும் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை பூஜ்ஜியமாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 172 கன அடியாகவும், புதன்கிழமை 175 கன அடியாகவும், வியாழக்கிழமை 454 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை 1,012 கன அடியாகவும் படிப்படியாக உயா்ந்தது.
Advertisement
Advertisement
இதன் விளைவாக அணையின் நீா்மட்டமும் மெல்ல உயா்ந்து வெள்ளிக்கிழமை காலை 112.45 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 256 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணையில் 1,303 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. நீா்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) வருமாறு: தேக்கடி- 17.6, பெரியாறு அணைப் பகுதி- 30 என மழை பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.