FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூரில் அரசு மாணவா் விடுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூரில் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, விடுதிகளை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:07 am IST
வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் விடுதியில் மாணவா்களுக்கு வழங்கிய அசைவ உணவின் தரம் குறித்து சோதனை செய்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, விடுதிகளை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல் நிலைப் பள்ளியில் சுமாா் 650 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் விளையாட்டு மைதானம், கூடுதல் வகுப்பறை, விடுதி அறைக் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா, பள்ளி தலைமை ஆசிரியருடன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பள்ளியின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மாணவா் விடுதியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., மாணவா்களுக்கு வழங்கிய அசைவ உணவை உண்டு, உணவின் தன்மை குறித்து சோதனை செய்தாா்.

அப்போது, அவரிடம் விடுதிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என விடுதி காப்பாளா் கோரிக்கை மனு அளித்தாா். இதேபோல, அப்பிபட்டி, எரசை என பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments